சன்மார்க்கம்
——————
சன்மார்க்கம் – இது வட சொல் !
சத் என்றால் நிலைத்திருப்பது… மார்க்கம் வழி.
நிலைத்திருக்கும் வழி சன்மார்க்கம் . . .
தமிழில் இதை மரணமிலாப் பெரு வாழ்வு காட்டும் நெறி என்றும் சொல்லலாம்.
சாவாக் கலை நெறி என்பது இன்னும் பொருத்தம் .
இதை முதன் முதலில் உலகுக்கு அறிவித்தவர் வள்ளல் பெருமானார்
சிதம்பரம் இராமலிங்கம் அவர்கள் !
சன்மார்க்கத்திற்கு முதலில் சங்கம் கண்டவர் வடலூர் வள்ளல் பிரான் . . .
சன்மார்க்கம் என்பது உலகுக்குப் புதிய நெறியாக இருக்கலாம்,
ஆனால் தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும் இது புதியது அல்ல !
எல்லாம் வல்ல அருட் பெருஞ்சோதி இறைவனை முதலில்
வள்ளலார்தான் வழுத்தினார் என்பதும் மாறான கருத்தே !
வடலூர் வள்ளலாருக்கு முன்பே மாணிக்க வாசகர் இறைவனை
அருட் பெரும் தீ என்று பாடுகிறார் . . .
திரு வெம் பாவைப் பாடலில் . . .
‘ ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் . . . ‘ என்கிறார் !
சாவாக் கலை நெறியில் நம்மை ஆற்றுவித்து வழி நடத்த
வள்ளற் பெருமான் இராமலிங்க அடிகள்தான் வர வேண்டும்,
அல்லது அவருக்கு முன் அந் நிலையை அடைந்த
மாணிக்க வாசகர், திருஞான சம்பந்தர், திரு நாவுக்கரசர்,
மீனாட்சி, அபிராமி, விசாலாட்சி முதலியோர் வர வேண்டும் !
எல்லா தெய்வங்களிடமும் எல்லாவற்றையும் கேட்க முடியாது,
எல்லாக் கடவுளர்களும் எல்லாவற்றையும் கொடுக்கவும் முடியாது .
எடுத்துக் காட்டாக,
மரணமிலாப் பெரு வாழ்வு என்னும் மகத்தான பாக்கியத்தை
ஆடல்வல்லானாகிய நடராஜப் பெருமான்தான் அருள வேண்டும் !
நடராஜப் பெருமான் முழு முதற் கடவுள் . . .
அவரையே படைத்தவர் அருட் சோதிப் பெருமான் .
உலகின் ஒரே ULTIMATE REALITY யார் என்றால் அவரே
அருட் பெருஞ் சோதிப் பெம்மான்.
அளவற்ற பெருங் கருணைக்கும் அவரே சொந்தக் காரர்.
அதனால் தான் அவரைத் தனிப் பெருங் கருணை என்கிறார் வள்ளலார் !
அருட் பெருஞ் சோதி இறைவன் போல்
எல்லாம் வல்ல . . . எங்கும் நிறைந்த . . . அனைத்திலும் வியாபித்த .. .
ஓளி உடலை, மாற்றறியாப் பொன் உடலை, மந்திரமாம் உடலை
அடைதல் தான் மரணமிலாப் பெருவாழ்வு !
நேரிடையாக அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வணங்கினாலே
போதும் என்கிறார் வள்ளலார் . . .
ஆனால் அவரே தொடக்க நிலையில் முருகன், சக்தி என்றும்,
வளர்ந்த நிலையில் நடராசர் என்றும் பரவி
இறுதியில்தான் அருட் சோதிப் பெம்மானை அடைந்தார் என்பதையும்
நாம் நினைவிற் கொள்ள வேண்டும் !
கருவிலே திரு உருவான அவருக்கே நேரிடை என்பது சாத்தியமாகவில்லை
என்றால் நாம் எல்லாம் எம்மட்டு ?
வள்ளல்பிரான் அருளிய திருவருட்பா மொத்தம் ஆறு திரு முறைகள் !
இன்று வரை சைவ சித்தாந்தம் என்பது சன் மார்க்கத்தை
எட்டாத உயரத்திலேயே வைத்திருக்கிறது . . .
சன்மார்க்கம் என்பது சைவ சித்தாந்தத்தின் உச்சம் !
அலசுவோம் . . . இன்னும் நிறைய !
- மகுடதீபன் இராமநாதபுரம் magudadheeban@gmail.com 9486102034
Dear Magudadheeban,
Do you visit Vadalur on Thaipusam 2011? If you so, please reply me. We can meet up there.
Arutperunjothi
Arutperunjothi
Thaniperungkarunai
Arutperunjothi
Thanks my friend, On Thai poosam day
I will have to be always at my own place ,
that is Lord nataraja’s Abode.
We will continue to meet if time permits, elsewhere !
-magudadheeban